·   ·  321 news
  •  ·  0 friends

தவெக ஆட்சி அமைக்க 118 விஜய்க்கு கிடைக்குமா?

காங்கிரஸ் கட்சி கிட்டத்திட்ட தவெகவுக்கு ஆதரவளிக்கும் மனநிலைக்கு சென்றுவிட்டது. விஜய்க்கு ராகுல் காந்தியிடம் உள்ள தொடர்பு இதற்கான முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அதேபோல ஆட்சியில் பங்கு என்ற அடிப்படையில் சில அமைச்சர் பதவிகளை பெறலாம் என்ற கனவோடு காங்கிரஸார், இப்போதே தவெகவுக்கு ஆதரவளிக்க தயாராகிவிட்டதாகவே சொல்லப்படுகிறது. இதன் காரணமாக 5 உறுப்பினர்களின் ஆதரவு விஜய்க்கு உறுதியாகவிட்டதாகவே பேசப்படுகிறது.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், ‘விஜய்யை எங்கள் எதிரியாக நாங்கள் பார்க்கவில்லை; பாஜக - அதிமுகவே எதிரி’ என்றார். எனவே அவரும் ஆட்சியில் பங்கு உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் விஜய்க்கு ஆதரவு கொடுக்க வாய்ப்பு உண்டு. விசிகவின் வழியில் இடதுசாரிகளும் விஜய்க்கு ஆதரவளிக்க வாய்ப்புள்ளது என்றே சொல்லப்படுகிறது.

இருப்பினும், இந்த முடிவு திமுகவுக்கு நெருடலை உருவாக்கலாம். ஆனாலும், பாஜகவின் கைங்கர்யத்தை தடுக்க விஜய்க்கு ஆதரவளிக்கிறோம் என்று அவர்கள் ‘கோரஸ்’ ஆக சொல்ல தயாராகிவிட்டதாக விவரமறிந்தவர்கள் சொல்கின்றனர். இதே கணக்கோடு ஐயுஎம்எல் கட்சியும் விஜய்க்கு ஆதரவளிக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவிடமும் தவெக தரப்பு ஆதரவு கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது. முதல் முறையாக தமிழக அமைச்சரவையில் இடம்பெறும் கனவோடு பாமகவும் தவெகவுக்கு ஆதரவளிக்க முன்வர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. தலா ஓர் இடத்தில் வென்றுள்ள அமமுக மற்றும் தேமுதிகவின் ஆதரவை நாடவும் விஜய் தரப்பு முயற்சித்து வருகிறது.

‘ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு’ என்று விஜய் தனது முதல் மாநில மாநாட்டிலேயே அறிவித்துவிட்டதால், தவெகவிடம் கூட்டணி வைக்க அனைத்துக் கட்சிகளுக்கும் எந்தச் சிக்கலும் இருக்காது. அதே நேரத்தில், தவெகவுடனான கூட்டணியை தொடர்ந்தால், அடுத்து வரவுள்ள உள்ளாட்சி தேர்தல்களிலும் கணிசமான இடங்களை கைப்பற்றலாம் என்ற கணக்கும் அக்கட்சிகளிடம் உள்ளது.

  • 332
  • More
Comments (0)
Login or Join to comment.