நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்கும் கனடிய முன்னாள் அமைச்சர்
கனடாவின் முன்னாள் பிரதி பிரதமர் மற்றும் கனடாவின் முன்னாள் அமைச்சர் க்ரிஸ்டியா ஃப்ரீலேண்ட் “அடுத்த சில வாரங்களில்” நாடாளுமன்றத்திலிருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.
உக்ரைனின் ஜனாதிபதி வொலோடிய்மிர் ஜெலென்ஸ்கி தனது பொருளாதார ஆலோசகராக நியமித்ததாக அறிவித்திருந்தார்.
உக்ரைன் வம்சாவளியாளர் ஃப்ரீலேண்ட், முன்பு கனடாவிற்கு உக்ரைன் புனரமைப்பு சிறப்பு பிரதிநிதி பதவியில் இருந்தார்.
2025 செப்டம்பர் மாதத்தில் அவர் உள்நாட்டுப் பொருளாதார வர்த்தக அமைச்சர் பதவியிலிருந்து விலகி புதிய பதவியை ஏற்றுக்கொண்டார். அப்போது அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“உக்ரைன் இன்று உலகளாவிய ஜனநாயகப் போரின் முன்னணி இடத்தில் உள்ளது. அதனால் நான் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அவர்களுக்கு பணம் பெறாமல் பொருளாதார ஆலோசகராக பங்களிக்க இந்த வாய்ப்பை வரவேற்கிறேன் என ஃப்ரீலேண்ட் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.