·   ·  76 news
  •  ·  0 friends

கனடாவிலிருந்து திரும்பப் பெறப்படும் டொயோட்டா வாகனங்கள்

கனடாவில் டொயோட்டா நிறுவனம் தனது பல வாகன மாதிரிகளை மென்பொருள் கோளாறு காரணமாக திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

இந்த கோளாறு வாகனங்களின் டிஸ்ப்ளே பேனல்களை பாதிக்கக்கூடும் என்பதால், விபத்து அபாயம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்று நிறுவனம் எச்சரித்துள்ளது.

கனடாவில் மட்டும் 70,480 வாகனங்கள் இந்த திரும்பப் பெறலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கனடாவின் மோட்டார் வாகன பாதுகாப்பு தரவுத்தளத்தின் படி, இந்த மென்பொருள் பிரச்சினை காரணமாக வாகனம் ஸ்டார்ட் செய்யும்போது ஸ்பீடோமீட்டர், எரிபொருள் அளவு, எச்சரிக்கை விளக்குகள், மற்றும் பழுது குறியீடுகள் போன்ற முக்கிய தகவல்கள் டிஸ்ப்ளேவில் காட்டப்படாமல் போகலாம்.

இந்த திரும்பப் பெறல் 12.3-அங்குல டிஸ்ப்ளே கொண்ட வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு நிறுவனம் அஞ்சல் மூலம் அறிவிப்பு அனுப்பும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள டீலர்ஷிப்புக்கு சென்று மென்பொருளை அப்டேட் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சில வாகனங்களில் டிஸ்ப்ளே காம்பினேஷன் மீட்டர் முழுமையாக மாற்றப்பட வேண்டியிருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 855
  • More
Comments (0)
Login or Join to comment.