
கனடாவிற்கு கொண்டு செல்லப்பட்ட 475 கிலோ கொக்கெய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டது
கனடாவுக்குள் கொண்டு செல்லப்பட்டு வந்த 475.95 கிலோ கிராம் கோகெய்னை அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை (CBP) தடுத்துள்ளது.
இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை அம்பாசெடர் (Ambassador) பாலம் அருகே இடம்பெற்றுள்ளது.
சந்தேகத்திற்குரிய ஒரு டிரெய்லரை சோதனை செய்தபோது, பல பெட்டிகளிலும் இரண்டு டஃபிள் பைகளிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெண்மையான தூள் போன்ற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பரிசோதனை செய்ததில் அது கோகெய்ன் என உறுதி செய்யப்பட்டது.
கொகெய்ன், லாரி மற்றும் டிரெய்லர் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவத்துடன் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிதியாண்டில் மட்டும் டெட்ராய்ட் பீல்ட் அலுவலகம் 4,300 பவுண்டுக்கு மேற்பட்ட கோகெய்னும், 1,000 பவுண்டுக்கு நெருக்கமான மெத் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.