பட்ஜெட் தாக்கல் - அமெரிக்க சார்பை குறைக்க திட்டம்
கனடா பிரதமர் மார்க் கார்னி அரசு தனது இரண்டாவது பட்ஜெட்டை இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது. இந்த பட்ஜெட்டின் முக்கிய நோக்கம் அமெரிக்க வர்த்தகத்தை சார்ந்திருப்பதை குறைப்பது ஆகும். நிதி அமைச்சர் பிரான்சுவா-பிலிப் சாம்பெய்ன் உள்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவிக்கவும், புதிய வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தவும் திட்டம் என்றார்.
பொருளாதார வல்லுநர்கள் எண்ணெய் வருவாய் அதிகரித்தாலும் செலவை கட்டுப்படுத்த வேண்டும் என எச்சரித்துள்ளனர். இல்லையெனில் வரும் ஆண்டுகளில் பற்றாக்குறை பெரிதாகும் என கூறினர். பட்ஜெட் மாலை 4 மணிக்கு ET நேரத்தில் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில் ஆட்டோ மற்றும் எஃகு தொழிலில் அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு, எரிசக்தி உற்பத்தி மற்றும் முக்கிய கனிம சுரங்க உள்கட்டமைப்புக்கு நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.