ஈரான் மீது தடைகள் மீண்டும்
கனடா ஈரானைச் சேர்ந்த 11 நிறுவனங்கள் மீது தடைகளை மீண்டும் விதித்துள்ளது. ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகளுக்கும், ஏவுகணை திட்டத்துக்கும் இவை உதவியதாக கனடா கூறியுள்ளது. வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த அறிவிப்பை பாரிஸ் நகரில் வெளியிட்டார்.
இந்த நிறுவனங்களில் ஈரானின் அணு எரிபொருள் நிறுவனம், தேசிய எண்ணெய் நிறுவனம், தேசிய எண்ணெய் கப்பல் நிறுவனம் மற்றும் வங்கிகளும் அடங்கும். இவை 2016 ஆம் ஆண்டு தடை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தன. தற்போது மீண்டும் தடை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.