·   ·  555 news
  •  ·  0 friends

வின்னிபெக்கில் வீடற்றோர் ஒழிப்பு திட்டம்

கனடா பிரதமர் இன்று நவம்பர் 6 ஆம் தேதி வின்னிபெக் நகரில் புதிய திட்டத்தை அறிவிக்கிறார். மனிடோபா மாகாணம் வின்னிபெக்கில் பட்ஜெட் 2026 இல் வீடற்ற நிலையை ஒழிக்க புதிய நடவடிக்கைகளை அவர் விளக்குவார்.

பிற்பகல் 12.10 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மனிடோபா முதலமைச்சர் வாப் கினிவ், வின்னிபெக் மேயர் ஸ்காட் கில்லிங்ஹாம், மாண்ட்ரியல் மேயர் சொராயா மார்டினெஸ் பெராடா ஆகியோர் கலந்து கொள்வார்கள்.

வீடற்றோருக்காக தற்காலிக மற்றும் ஆதரவு வீடுகளை கட்டுவதற்காக பில்ட் கனடா ஹோம்ஸ் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மாகாணங்கள், நகராட்சிகள், பழங்குடியின சமூகங்களுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படும்.

  • 53
  • More
Comments (0)
Login or Join to comment.