
கனடாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 16 பேர் கைது
கனடாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 16 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு கியூபெக்கில் உள்ள சனெ் பேர்னார்ட் டி லாகோல் அருகே கனடா எல்லை பாதுகாப்பு பொலிஸார் குறித்த நபர்களை கைது செய்துள்ளனர். மொத்தம் 18 பேர் கொண்ட குழுவில் 2 பேரை இன்னும் தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமான முறையில் எல்லையை கடக்க முயன்றதாக குறித்த நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.