·   ·  280 news
  •  ·  0 friends

மசூத் அசார் திடீர் மரணம்

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் முகமது தாஹிர் அன்வர் பாகிஸ்தானில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவரது மரணத்தை அந்த அமைப்பு உறுதிப்படுத்தியிருந்தாலும், இறப்பிற்கான காரணம் குறித்து மௌனம் காப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

பகவல்பூரில் இவரது இறுதி சடங்குகள் நடைபெற்ற நிலையில், இது திட்டமிடப்பட்ட தாக்குதலா அல்லது உடல்நலக் குறைவா என்ற விவாதம் கிளம்பியுள்ளது.

இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், புல்வாமா மற்றும் உரி தாக்குதல்களில் தொடர்புடைய இந்த அமைப்புக்கு தாஹிர் அன்வாரின் மறைவு பெரும் பின்னடைவாகும்.

இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகள் பாகிஸ்தான் மண்ணில் ஒவ்வொருவராக கொல்லப்பட்டு வருவது, அந்நாட்டிலுள்ள பயங்கரவாத கட்டமைப்புகள் சிதைந்து வருவதையே காட்டுகிறது. அசாரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முக்கிய தளபதிகளின் தொடர் இழப்புகள், அந்த அமைப்பின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளன.

  • 29
  • More
Comments (0)
Login or Join to comment.