·   ·  304 news
  •  ·  0 friends

பெரும்பான்மை நிரூபித்த தவெக

தமிழக வெற்றிக் கழகம் தங்களுடைய பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான 'நம்பிக்கை வாக்கெடுப்பு' இன்று (மே. 13) நடைபெற்றது.

இதில் 144 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று முதல்வர் விஜய்யின் தவெக பெரும்பான்மையை நிரூபித்திருக்கிறது.

இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய், " மனசாட்சியுள்ள மக்களாட்சியை இந்த அரசு தரும். எதிர் தரப்பில் பேசியவர்கள் இது சிறுபான்மை அரசு என்றார்கள். ஆம் இது சிறுபான்மை அரசு தான். இது சிறுபான்மை மக்களுக்காக செயல்படும் அரசு தான். எவரையும் வெறுக்கும் அரசு இல்ல.

எல்லோரையும் விரும்பும் அரசு. மக்களே முக்கியம். மக்கள் நலனே முக்கியம். இது அதிகாரம் காட்டும் அரசு அல்ல. அரவணைக்கும் அரசு.

துள்ளி எழுந்து பதில் சொல்வதைவிட எதிலும் துணிச்சலாக செயலாற்றும் அரசு. மக்களாட்சியை ஆதரித்த அனைவருக்கும் நன்றி." என்று தெரிவித்திருக்கிறார்.

  • 30
  • More
Comments (0)
Login or Join to comment.