·   ·  573 news
  •  ·  0 friends

ஜீப் தொழிற்சாலை விவகாரத்தில் கனடா வழக்கு மிரட்டல்

பிராம்ப்டன் நகரில் இருந்த ஜீப் காம்பஸ் தயாரிப்பை நிறுத்தி, அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலத்திற்கு மாற்றியதற்காக ஸ்டெல்லான்டிஸ் நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப் போவதாக கனடா எச்சரித்துள்ளது. இதனால் சுமார் மூவாயிரம் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் என்று தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் கார் இறக்குமதி வரி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் கனடா அரசு கொடுத்த நிதி உதவியை திரும்ப கேட்பதாகவும், ஒப்பந்தத்தை மீறியதாகவும் கூறியுள்ளது. பிராம்ப்டன் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கனடா அரசு உறுதியாக நிற்பதாக தெரிவித்துள்ளது.

  • 71
  • More
Comments (0)
Login or Join to comment.