அமெரிக்க இடைத்தேர்தலில் கனடா தலையீடு என அமெரிக்கா குற்றச்சாட்டு
அமெரிக்க அரசு கனடா மீது பெரிய குற்றச்சாட்டை வைத்துள்ளது. நவம்பர் மூன்றாம் தேதி நடக்க உள்ள இடைத்தேர்தலில் கனடா தலையிட முயற்சிப்பதாக அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது.
ஒட்டாவாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட தகவல் அறிக்கையில் இந்த குற்றச்சாட்டு இடம்பெற்றுள்ளது. அமெரிக்க அரசியலில் செல்வாக்கு செலுத்த கனடா முயற்சிப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தி அமெரிக்கா - கனடா உறவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே வரி போர் நடந்து வரும் நிலையில் இந்த குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.