ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை என நீதிமன்றம் தீர்ப்பு
வங்காளதேச முன்னாள் பிரதமர் 78 வயதான ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்து இன்று(17) அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் அறிவித்தது.
வங்க தேசத்தில் 2024ஆம் ஆண்டு இடஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற மாணவர்கள் கிளர்ச்சியின் போது, 1000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அப்போது வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. இந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. மேலும், அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அரசுக்கு எதிராக போராடுவோரை சுட்டுக்கொல்ல ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ வெளியானது.
இதை ஆதாரமாக வைத்து ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை மந்திரி, முன்னாள் போலீஸ் ஐ.ஜி, ஆகியோர் மீது, மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக புதிய வழக்கை தீர்ப்பாயம் பதிந்து விசாரணை நடத்தி வந்ததுஇந்த நிலையில், மேற்கூறிய வழக்கில் இன்று (17) தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், மனித குலத்திற்கு எதிராக ஷேக் ஹசீனா குற்றம் செய்துள்ளார் என அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் அறிவித்தது. மேலும் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஷேக் ஹசீனா கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்தியாவில் தஞ்சம் அடைந்துள் குறிப்பிடத்தக்கது.