·   ·  93 news
  •  ·  0 friends

தைவானில் கனடிய இளைஞன் செய்த பாராட்டுக்குரிய செயல்

பெரும்பாலானோர் தங்களின் விடுமுறைகளை கடற்கரையிலும் சுற்றுலா மையங்களிலும் கழிக்க விரும்பும் நிலையில், கனடாவின் எட்மண்டனில் வசிக்கும் ஜேரன் ரோசோ வீக்ஸ் (Jaron Rosso Wiigs) தைவானில் ஏற்பட்ட புயல் சேதங்களை அகற்ற உதவியுள்ளார். அவர் தைவானுக்கு சென்றபோது, கிழக்கு தைவானில் உள்ள குவாங்ஃபூ நகரில் கடும் புயலால் மண், தண்ணீர் மற்றும் சிதிலங்கள் தெருக்களில் அடித்துச் சென்றது பற்றிய தகவலை அறிந்து கொண்டார்.

“எனக்கு 21 நாட்கள் விடுமுறை இருக்கிறது. அதில் 10 நாட்களை ஹுவாலியென் மாகாணத்தில் உதவுவதற்கு செலவிடுவது பெரிய விஷயம் அல்ல. இது தைவானின் வரலாற்றில் என்றும் நினைவாக இருக்கும் தருணம்,” என வீக்ஸ் தெரிவித்தார்.

அவர் இதற்கு முன் கனடாவின் பான்ஃப் பகுதியில் உள்ள Bow Falls-இல் இருந்து 18 மீட்டர் உயரத்தில் விழுந்து உயிர் தப்பிய அனுபவம் உண்டு. “எனக்கு சில நேரங்களில் அதிர்ஷ்டம் உதவி செய்கிறது; அதற்காக பிரபஞ்சத்திற்கு திருப்பித் தரவேண்டும் என்ற உணர்வு வருகிறது,” என அவர் கூறியுள்ளார்.

தன்னார்வ அடிப்படையில் வீக்ஸ் இவ்வாறு பாதிக்கப்பட்ட தாய்வான் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் களத்தில் இறங்கி உதவிகளை வழங்கியதன் மூலம் அனைவரினதும் பாராட்டைப் பெற்று வருகின்றார்.

  • 813
  • More
Comments (0)
Login or Join to comment.