
கனடியர்கள் குடியுரிமை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டும் தீவுகள்
கனடியர்கள் கரீபியன் தீவுகளில் குடியுரிமை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனேடியர்கள் பயண விசா வசதிக்காக அல்ல, மாறாக வாழ்க்கை முறை, நெகிழ்வுத்தன்மை மற்றும் எதிர்கால பாதுகாப்புக்காக ரியல் எஸ்டேட் முதலீடு மூலம் குடியுரிமை பெறுவதை அதிகளவில் ஆராய்ந்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கிழக்கு கரீபியனில் உள்ள ஐந்து நாடுகள் தங்கள் அழகிய கடற்கரைகளை மட்டுமே விற்பனை புள்ளியாக முன்னிறுத்துவதை நிறுத்திவிட்டு, வெளிநாட்டினரை வீடு வாங்க அல்லது நன்கொடை வழங்குவதற்கு ஈடாக குடியுரிமை வழங்கும் முறையை பிரபலமாக்கியுள்ளன.
குடியுரிமை மூலம் முதலீடு (CBI) திட்டங்களை வழங்கும் தீவு நாடுகள் அன்டிகுவா மற்றும் பார்புடா, டொமினிகா, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயின்ட் லூசியா மற்றும் கிரெனடா ஆகியன என்பது குறிப்பிடத்தக்கது. கனேடியர்களும் அமெரிக்கர்களும் ரியல் எஸ்டேட் மூலம் முதலீடு செய்து குடியுரிமை பெற்றுக்கொள்ள விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கரீபியன் கடவுச்சீட்டுக்கள் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்தை வழங்குகின்றன, இதில் ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா மற்றும் சிங்கப்பூர் ஆகியவை உள்ளடங்குகின்றன. நைஜீரியா, பாகிஸ்தான் அல்லது வியட்நாம் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இது கவர்ச்சிகரமான ஒர் வாய்ப்பாக அமைகின்றது.
எனினும், கனேடியர்கள் வித்தியாசமானவர்கள். “கனேடியர்களுக்கு ஏற்கனவே வலுவான கடவுச்சீட்டுகள் உள்ளன, வாழ்க்கை முறை, வரி திட்டமிடல் அல்லது உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு ஒரு மாற்று பாதுகாப்பு திட்டமாக கனடியர்கள் இவ்வாறு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.