·   ·  33 news
  •  ·  0 friends

பசுமைக் கட்சியின் தலைவர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

கனடாவின் பசுமைக் கட்சியின் (Green Party of Canada) நீண்டகாலத் தலைவரான எலிசபெத் மே எதிர்வரும் தேர்தலில் கட்சியை வழிநடத்தப் போவதில்லை என அறிவித்துள்ளார். இதன் காரணமாக கட்சி மீண்டும் புதிய தலைவரைத் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கட்சி உறுப்பினர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை தாம் நாடாளுமன்ற உறுப்பினராகவும், கட்சித் தலைவராகவும் தொடர்ந்து பணியாற்ற உள்ளதாக எலிசபெத் மே தெரிவித்தார். 2025 இலையுதிர் கால நாடாளுமன்ற அமர்வுக்கு பெரிய திட்டங்கள் வகுத்துள்ளோம் என மே தனது மின்னஞ்சலில் கூறியுள்ளார்.

  • 1396
  • More
Comments (0)
Login or Join to comment.