
பிரேஸில் நாட்டில் பயங்கர விபத்து
பிரேசிலின் மத்திய - மேற்கு மாநிலமான மாடோ க்ரோசோ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பஸ்ஸும் லொறியும் மோதியதில் ஏற்பட்ட இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 12 பேரும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.