
அமெரிக்க பயணங்கள் குறித்து கனடா விடுத்துள்ள அறிவிப்பு
கனடா அரசாங்கத்தினால் அமெரிக்கா பயணம் தொடர்பான புதிய பயண அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. தமது நாட்டுப் பிரஜைகள் அமெரிக்காவிற்கு மேற்கொள்ளக்கூடிய பயணங்கள் தொடர்பில் கனடா புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
அதில், ‘X’ பாலினக் குறியீடு கொண்ட கனடியப் கடவுச்சீட்டு வைத்திருப்போர் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுக்குள் நுழையும்போது அல்லது இடைநிலையப் பயணத்தில் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
கனடா, தன்னை முழுமையாக ஆண் அல்லது பெண் என அடையாளப்படுத்தாத இருமமிலி non-binary குடிமக்களுக்கு ‘X’ குறியீடு கொண்ட கடவுச்சீட்டுக்களை வழங்குகிறது. ஆனால், பல நாடுகள் மற்றும் விமான நிறுவனங்கள் இன்னும் ‘X’ பாலின அடையாளத்தை அங்கீகரிக்காததால், பயணிகள் ‘ஆண்’ அல்லது ‘பெண்’ குறியீட்டை வழங்க வேண்டிய அவசியம் ஏற்படலாம் என அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளது.
“பயணத்திற்கு முன், நீங்கள் செல்லும் நாட்டின் தூதரகம் அல்லது அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளிடம் தொடர்புகொண்டு தகவல் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்” என அறிவுறுத்தலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.