·   ·  127 news
  •  ·  0 friends

ஆப்பிள் கடிகாரத்தினால் ஏற்பட்ட குழப்பம்

சுற்றுலாப் பயணிகள் ஆப்பிள் சாதனங்களில் உள்ள அவசர நிலை (Emergency SOS) அம்சத்தை பொறுப்புடன் பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

கனடாவின் மெட்ரோ வன்கூவர் பகுதியில் செயல்படும் ஒரு தேடல் மற்றும் மீட்புக் குழு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

கடந்த புதன்கிழமை, கோக்விட்லாம் தேடல் மற்றும் மீட்பு குழு (Coquitlam Search and Rescue) தன்னார்வலர்கள், இந்தியன் ஆமின் வடகிழக்குப் பகுதியில் ஒருவருக்கு மருத்துவ அவசரநிலை ஏற்பட்டதாக பிரிட்டிஷ் கொலம்பிய அவசர சுகாதார சேவைகள் தெரிவித்ததையடுத்து விரைந்து சென்றனர். ஆனால், விசாரணையில் அது தவறாக செயல்படுத்தப்பட்ட ஆப்பிள் வாட்ச் SOS அலாரம் காரணமாக உருவான தவறான அழைப்பாக தெரியவந்தது.

“அவசரநிலைகளில் SOS அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், தவறான அலாரங்கள் உண்மையான மீட்பு நடவடிக்கைகளில் தேவையான வளங்களை வீணாக்கக்கூடும்,” என்று அந்த அமைப்பு சமூக ஊடகத்தில் குறிப்பிட்டது.

புதிய iPhone மற்றும் Apple Watch மாடல்களில் பக்கப்பொத்தானையும் ஒலி அளவு பொத்தானையும் ஒரே நேரத்தில் அழுத்தில் 911 அவசர சேவைக்கு அழைப்பு செல்லும். சில அமைப்புகளில் இது தானாகவே அழைப்பை மேற்கொள்ளும் வகையில் இருக்கும்; சிலவற்றில் கூடுதல் உறுதிப்படுத்தல் படி தேவைப்படும்.

கோக்விட்லாம் மீட்புக் குழு, அவசர அழைப்பு தானாக செயல்பட வேண்டாம் என விரும்பும் பயனர்கள் auto-call அம்சத்தை முடக்குமாறு பரிந்துரைத்துள்ளது. அதேபோல், வெளிச்சூழலில் அல்லது நடைபயணங்களில் பொத்தான்கள் தவறாக அழுத்தப்படாமல் இருக்க பாதுகாப்பு கவர் பயன்படுத்தவும், சாதனம் பையில் அல்லது உடை ஜேபில் இருக்கும் போது கவனமாக இருக்கவும் கேட்டுக் கொண்டது.

  • 245
  • More
Comments (0)
Login or Join to comment.