யூகானில் நிலநடுக்கம்
யூகான் மாநிலத்தில் வாட்சன் ஏரி பகுதியில் சனிக்கிழமை மதியம் 5.4 அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் வாட்சன் ஏரிக்கு தென்மேற்கே சுமார் 47 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக நிலநடுக்க கண்காணிப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
வைட்ஹார்ஸ் வரை இந்த அதிர்வு உணரப்பட்டதாகவும், வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியா பகுதிகளிலும் அதிர்வு தெரிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் பெரிய சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. மக்கள் அச்சத்துடன் வீடுகளில் இருந்து வெளியே வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.