·   ·  390 news
  •  ·  0 friends

கனடாவில் 12 வயது சிறுவனின் உடல் மீட்பு / கொலை வழக்குப்பதிவு

கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள ஆதாபாஸ்கா பகுதியில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பொலிஸார் அது தொடர்பில் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 6-ஆம் திகதி அதிகாலை 3:26 மணியளவில், ஆதாபாஸ்கா பகுதியில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாகக் கிடைத்த தகவலை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

எட்மண்டன் நகரில் ஆகஸ்ட் 7 அன்று மேற்கொள்ளப்பட்ட உடற்கூறாய்வு பரிசோதனையின் மூலம், உயிரிழந்தவர் எட்மண்டனைச் சேர்ந்த பைசல் ஹுசைன் 12 வயது சிறுவன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இக்கொலைச் சம்பவம் தொடர்பாக 'ஆர்சிஎம்பி'யின் முக்கிய குற்றப் பிரிவு விசாரணையை தன்வசப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், ஆதாபாஸ்கா பொலிஸாரை 780-675-4252 என்ற எண்ணிலோ அல்லது இரகசியம் காக்கும் 'க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' அமைப்பை 1-800-222-8477 என்ற எண்ணிலோ தொடர்புகொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

  • 30
  • More
Comments (0)
Login or Join to comment.