·   ·  316 news
  •  ·  0 friends

பிரிட்டிஷ் கொலம்பியா மக்களுக்கு எச்சரிக்கை

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள ஒரு பகுதியில், கழிவுநீர்க்குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அறிவிப்பு வரும் வரை மக்கள் டாய்லெட்டை பிளஷ் செய்யவேண்டாம், குளிக்கவேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Comox Valley பகுதியில், கழிவுநீர்க்குழாய் ஒன்றில் உடைப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அப்பகுதியில் வாழும் மக்கள் டாய்லெட்டை ஃப்ளஷ் செய்யவோ, டிஷ் வாஷர் மற்றும் வாஷின் மெஷின் பயன்படுத்தவோ வேண்டாம் என்றும் குளிக்கவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

Comox Valleyயில் வாழும் ஸ்டீவ் ஜோன்ஸ் என்பவர், தான் அந்த கழிவுநீர்க் குழாய் உடைப்பை நேரில் சென்று பார்த்ததாக தெரிவிக்கிறார்.

கழிவுநீர் வழிந்தோடி, ஒரே துர்நாற்றம் வீசுவதாகக் கூறும் ஜோன்ஸ், அந்த கழிவுநீர் கடலில் கலப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  ஆகவே, மக்கள் அந்த பகுதியில் கடலில் நீந்தச் செல்லவேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

அப்படியானால், மக்கள் காலைக்கடன் முதலான விடயங்களுக்காக எங்கே செல்வது? இந்த ’no-flush area’, அதாவது குளிக்க வேண்டாம், டாய்லெட்டை ஃப்ளஷ் செய்ய வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ள பகுதிக்கு வெளியில் சில தனி கழிவறைகள் இருப்பதாகவும், அதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், அல்லது, அந்த பகுதியிலேயே அருமையான உணவகம் ஒன்று உள்ளதாகவும், மக்கள் அங்கு செல்லலாம் என்றும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 49
  • More
Comments (0)
Login or Join to comment.