
பசி கொடுமையில் காசா மக்கள்
காசா பகுதி முழுவதும் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. விமானம் மூலம் வீசப்படும் உணவுப்பொருட்களை சேகரிக்க பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக ஓடும் காட்சி காட்சி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீன போர் எதிரொலியால் காசா எல்லை பகுதிகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. மேலும் உணவுப்பொருட்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதை உணர்ந்த சில நாடுகள் விமானம் மூலம் உணவுப்பொருள் அடங்கிய மூட்டைகளை பாராசூட் உதவியுடன் மேலிருந்து வீசிகின்றன. இதற்காகவே நீண்ட நாட்கள் காத்திருக்கும் மக்கள் உணவை சேகரிக்க உயிர் போராட்டமே நடத்துகின்றனர்.