·   ·  76 news
  •  ·  0 friends

கனடாவில் அதிகளவில் ஓய்வு பெற இருக்கும் பணியாளர்கள்

கனடா, சில்வர் சுனாமி என்னும் வெள்ளி சுனாமி, அல்லது சாம்பல் சுனாமி என்னும் ஒரு விடயத்தை எதிர்கொள்ள இருக்கிறது.

1946க்கும் 1964க்கும் இடையில் பிறந்த Baby boomers என அழைக்கப்படும் தலைமுறையைச் சேர்ந்தவர்கள், முதிர் வயதை அடையும் ஒரு நிலையே மக்கள்தொகை தொடர்பில் வெள்ளி சுனாமி என அழைக்கப்படுகிறது. அதாவது, இரண்டாம் உலகப்போருக்குப் பின் உலகில் பிறந்த மக்கள் வேலைக்குச் செல்லத் துவங்கிய நிலையில், தற்போது, அவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் பணி ஓய்வுபெறும் வயதை எட்டியுள்ளார்கள்.

கனடாவும் இதற்கு விதிவிலக்கல்ல. 2030ஆம் ஆண்டுவாக்கில், அவர்கள் அனைவரும் ஓய்வு பெற்றுவிடுவார்கள்.

விடயம் என்னவென்றால், பணியாளர்கள் ஓய்வுபெறும்போது, அந்த இடத்தை நிரப்பும் அளவுக்கு இளைஞர்கள் இல்லை. அதைவிட கவலைக்குரிய விடயம் என்னவென்றால், கனடாவில் பிறப்பு வீதமும் குறைந்து வருகிறது.

  • 506
  • More
Comments (0)
Login or Join to comment.