·   ·  182 news
  •  ·  0 friends

தீ விபத்தினால் இருளில் மூழ்கியது சான் பிரான்சிஸ்கோ

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால் அப்பகுதியில் மின் விநியோகம் தடைப்பட்டது. இதனால் நகரின் வட பகுதி முழுவதும் இருள் சூழ்ந்த நிலையில், போக்குவரத்து ஒளி சமிக்ஞைகளும் இயங்கவில்லை. இதன் காரணமாக வீதியில் சென்றுகொண்டிருந்த தானியங்கி கார்கள் ஆங்காங்கே நடுவழியில் நின்றுவிட, அவ்வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இருள் சூழ்ந்த வேளையில் வீதி நெடுகிலும் வரிசையில் நின்ற கார்களின் சமிக்ஞை விளக்குகள் மட்டும் ஒளிர்ந்த காட்சி கழுகுப் பார்வையாய் பிடிக்கப்பட்ட படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகர் முழுதும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அலங்கார வடிவமைப்புகள் களைகட்டி வருகிறது.

வணிக வளாகங்கள், கடைகளில் வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், சான் பிரான்சிஸ்கோவின் துணைமின் நிலையத்தில் சனிக்கிழமை (20) பாரிய தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மின் இணைப்புச் சாதனங்கள் தீயில் எரிந்ததால், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

  • 63
  • More
Comments (0)
Login or Join to comment.