கனடா நிதிநிலை அறிக்கை நிறைவேறியது
கனடா நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியின் 2026 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை நிறைவேறியது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 162 பேர் ஆதரவாகவும், 151 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதன் மூலம் முன்கூட்டிய தேர்தல் வரும் என்ற அச்சம் நீங்கியது.
இந்த நிதிநிலை அறிக்கையில் உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களுக்கு பெரும் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் நவம்பர் 5 ஆம் நாள் இந்த அறிக்கையை தாக்கல் செய்திருந்தார்.