கனடாவில் சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் விஷ பாதிப்பு
சிறுவர்கள் வீட்டில் உள்ள பொருட்களைத் தவறுதலாக உட்கொள்வதால் ஏற்படும் நச்சுப் பாதிப்புகள் (Accidental Poisoning) சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.
இது குறித்து ஒண்டாரியோ நச்சுத்தன்மை கட்டுப்பாட்டு மையம் (Ontario Poison Centre) மற்றும் சுகாதார நிபுணர் டாக்டர் பால் ரூமெலியோடிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் மட்டும் ஒண்டாரியோ நச்சுத்தன்மை கட்டுப்பாட்டு மையம் நாளொன்றுக்கு சராசரியாக 189 நச்சுப் பாதிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 6 வயதிற்குட்பட்ட சுமார் 24,000 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவர்கள் சில ஆபத்தான வீட்டு உபயோகப் பொருட்களை உணவுப் பொருட்கள் என தவறாக கருதி உட்கொள்கின்றனர்.
வண்ணமயமான ஜன்னல் மற்றும் தரை சுத்திகரிப்பான்கள் (Cleaning liquids) குளிர்பானங்கள் அல்லது பழச்சாறுகளைப் போலவே இருப்பதால் சிறுவர்கள் அவற்றைக் குடிக்க நேரிடுகிறது.
சலவை மற்றும் பாத்திரங்களைக் கழுவும் 'பாட்கள்' (Pods), இவை மிட்டாய்களைப் போல காட்சியளிப்பதால் சிறுவர்கள் அவற்றை மெல்லுகின்றனர்.
இவை வாயில் வெடிக்கும் போது கடுமையான பாதிப்புகளை உண்டாக்குகின்றன. விட்டமின் மாத்திரைகள் (Vitamins) மிட்டாய்களைப் போன்ற சுவையிலும் வடிவத்திலும் இருக்கும் வைட்டமின் மாத்திரைகளை அதிகளவில் உட்கொள்வது உயிருக்கே ஆபத்தாக முடியும்.
கஞ்சா கலந்த தின்பண்டங்கள் (Edible Cannabis): சாக்லேட் மற்றும் பிஸ்கட் வடிவில் வரும் கஞ்சா தயாரிப்புகள் சிறுவர்களை எளிதில் ஈர்க்கின்றன.