கல்கரியில் கிரே கோப்பை இறுதி
கிரே கோப்பை இறுதிப் போட்டிக்காக எட்மண்டன் மற்றும் மாண்ட்ரியல் அணிகள் கல்கரிக்கு வந்து சேர்ந்தன. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள 113 ஆவது கிரே கோப்பை இறுதிப் போட்டியில் இரு அணிகளும் மோதவுள்ளன. நகரம் முழுவதும் விழா களைகட்டியுள்ளது.
கிரே கோப்பை வந்ததை கொண்டாடும் வகையில் கல்கரியில் சிறப்பு ஊர்வலம் நடைபெற்றது. கனடிய படையினரின் மரியாதையுடன் கோப்பை நகருக்கு கொண்டு வரப்பட்டது. ரசிகர்கள் இரு அணிகளையும் உற்சாகமாக வரவேற்றனர்.