பிரதமர் மார்க் கார்னி புதிய எண்ணெய் குழாய் திட்டத்தை Fast-Track செய்கிறார்
கனடா பிரதமர் மார்க் கார்னி நேற்று பசிபிக் லிங்க் என்ற புதிய கச்சா எண்ணெய் குழாய் திட்டத்தை தேசிய நலன் கொண்ட திட்டமாக அறிவித்து, அனுமதி செயல்முறையை விரைவுபடுத்தப்போவதாக அறிவித்தார். இது மேற்கு கடற்கரை வரை சென்று ஆசிய சந்தைகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய உதவும், ஆண்டுக்கு C$20 பில்லியன் GDP வருமானம் தரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரி விதிப்பு அழுத்தத்தில் இருந்து கனடா பொருளாதாரத்தை பல்வகைப்படுத்த இது முக்கிய திட்டம் என கார்னி கூறினார். இந்த வாரம் அவர் தேசிய AI கவுன்சிலையும் தொடங்கியுள்ளார், மேலும் இந்த மாதம் துருக்கி சென்று அதிபர் எர்டோகனை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.