·   ·  401 news
  •  ·  0 friends

கனடாவில் பாரிய போதைப் பொருள் கடத்தல் கும்பல் கைது

கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள வால்போல் ஐலண்ட் ஃபர்ஸ்ட் நேஷன் பகுதியில் பல மாதங்களாக நடைபெற்ற தீவிர போதைப்பொருள் கடத்தல் தடுப்பு விசாரணையை அடுத்து, லண்டன் நகரைச் சேர்ந்த 3 பேரை ஒண்டாரியோ மாகாண காவல்துறை கைது செய்துள்ளது.

'புராஜெக்ட் பிரேக்' எனப் பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையின் முடிவுகளை, வால்போல் ஐலண்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காவல்துறையினர் முறைப்படி அறிவித்தனர்.

பல்வேறு தென்மேற்கு ஒன்ராறியோ சமூகங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனைகளில், சுமார் 1.2 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஃபெண்டானில், கொக்கைன், மெத்தாம்பெட்டமைன் ஆகிய ஆபத்தான போதைப்பொருட்கள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் 5 திருடப்பட்ட வாகனங்கள் மற்றும் சுமார் 20,000 கனடிய டாலர் ரொக்கம் என்பன மீட்கப்பட்டுள்ளன.

கடந்த 2026 ஏப்ரல் மாதம் வால்போல் ஐலண்டில் போதைப்பொருள் கடத்தல் நடப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கியது.

லேம்ப்டன் மற்றும் சாதம்-கென்ட் பகுதிகளில் போதைப்பொருள் விநியோகம் செய்து வந்த குழுவைக் குறிவைத்து ஜூலை 17 அன்று சோதனைகள் நடத்தப்பட்டு 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த போதைப்பொருட்கள் கனடாவிற்குள்ளேயே விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சமூகத்தின் பாதுகாப்பைப் பேணவும், குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் இளைஞர்களைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை மிகவும் அவசியமானது என வால்போல் ஐலண்ட் ஃபர்ஸ்ட் நேஷன் தலைவர் லீலா தாமஸ் தெரிவித்துள்ளார்.

  • 69
  • More
Comments (0)
Login or Join to comment.