·   ·  519 news
  •  ·  0 friends

கனடா - ஐக்கிய அரபு அமீரகம் வரலாற்று வர்த்தக ஒப்பந்தம்

ஒட்டாவாவில் நேற்று கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது தலைமையில் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (CEPA) கையெழுத்தானது. இது வெறும் 47 நாட்களில் பேச்சுவார்த்தை முடிந்த வேகமான ஒப்பந்தம் என்று கனடா அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் முழுமையாக அமலுக்கு வந்தால், கனடாவின் தற்போதைய ஏற்றுமதிகளில் 99%-க்கும் மேற்பட்டவற்றின் மீதான வரி குறைக்கப்படும் அல்லது நீக்கப்படும். விவசாயம், தொழில், காடு, மீன், சுற்றுச்சூழல் மற்றும் பொறியியல் சேவைகளுக்கு சந்தை அணுகல் விரிவுபடுத்தப்படும்.

கனடா தனது அமெரிக்கா அல்லாத வர்த்தகத்தை அடுத்த பத்து ஆண்டுகளில் இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் கனடாவில் 5000 கோடி டாலர் வரை முதலீடு செய்ய உறுதி அளித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் கடந்த ஆண்டு 35 பில்லியன் கனடா டாலராக இருந்தது.

  • 44
  • More
Comments (0)
Login or Join to comment.