·   ·  393 news
  •  ·  0 friends

படகிலிருந்து தவறி விழுந்து காணாமல்போன 13 வயது சிறுமி சடலமாக மீட்பு

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் உள்ள 'கல்டஸ்' ஏரியில் துடுப்புப் படகில் சென்று கொண்டிருந்த போது நீரில் மூழ்கி மாயமான 13 வயது சிறுமியின் உடலை காவல்துறையினர் சடலமாக மீட்டுள்ளனர்.

காவல்துறையின் நீருக்கடியிலான மீட்புக் குழுவினர் திங்கள்கிழமை மதியம் 2 மணியளவில் ஏரியிலிருந்து அச்சிறுமியின் உடலை கண்டெடுத்ததாகத் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை பிற்பகலில் அச்சிறுமி ஏரியில் துடுப்புப் படகில் பயணம் செய்து கொண்டிருந்த போது, அவருக்கு எதிர்பாராதவிதமாக திடீர் மருத்துவ அவசரநிலை ஏற்பட்டு நீரில் தவறி விழுந்துள்ளார்.

விசாரணையில், நீரில் மூழ்கிய போது அந்தச் சிறுமி உயிர் காக்கும் கவசச் சட்டையை அணிந்திருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

சிறுமியின் உடல் குறித்த பிரதேப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமி உயிரிழந்த செய்தி எங்களை மிகவும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சிறுமியின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  • 29
  • More
Comments (0)
Login or Join to comment.