கனடா - ஐரோப்பிய ஒன்றிய எதிர்கால கூட்டணி
மாண்ட்ரியலில் நடந்த கனடா-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் இரு தரப்பும் எதிர்கால கூட்டணி என்ற புதிய கூட்டமைப்பை தொடங்கியுள்ளன. கனடா ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக மாற தயாராகி வருகிறது. பிரதமர் கார்னி டிஜிட்டல் வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
இந்த நடவடிக்கை உலகளாவிய நிச்சயமற்ற தன்மை அதிகரிக்கும் நிலையில் ஆழமான உறவை தேடும் முயற்சி என கூறப்படுகிறது. அமெரிக்கா மீதான சார்பை குறைத்து, ஐரோப்பாவுடன் வர்த்தகத்தை இரட்டிப்பாக்குவதே கனடாவின் நடுநிலை சக்தி உத்தி என வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.
இந்த கூட்டணி மூலம் பாதுகாப்பு, வர்த்தகம், டிஜிட்டல் துறைகளில் கனடாவின் பொருளாதார இறையாண்மை வலுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.