வன்கூவர் தீவில் வெள்ளம், மக்கள் வெளியேற்றம்
வன்கூவர் தீவு மற்றும் வன்கூவர் நகர பகுதியில் கனமழை, கடல் அலை உயர்வு காரணமாக வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பல இடங்களில் மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர். கோர்ட்னே, பார்க்ஸ்வில், லான்ட்ஸ்வில் போன்ற பகுதிகளில் வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சில இடங்களில் வெள்ள நீர் முப்பது முதல் ஐம்பது சென்டி மீட்டர் வரை உயரும் என்று வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது. புயல் காற்று, பெரிய அலைகள், உயர் அலை ஆகியவை சேர்ந்து கரையோர பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து விலகி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.