·   ·  144 news
  •  ·  0 friends

கனடாவில் வேலை வாய்ப்புக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்

ஸ்வீடன் கிரிப்பென் (Gripen) போர் விமான உற்பத்தியாளர் சஹாப் SAAB, கனடா தமது ராணுவத்துக்காக இந்த விமானத்தை தேர்வு செய்தால், 10,000 உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி வேலை வாய்ப்புகள் கனடாவில் உருவாகலாம் என அறிவித்துள்ளது.

கனடிய அரசுடன் விமான உற்பத்தியை நேரடியாக கனடாவில் மேற்கொள்ளும் வாய்ப்பு குறித்து ஆலோசனைகள் நடந்து வருவதாக SAAB நிறுவனத்தின் தலைவர் மைகேல் யோஹான்சன் உறுதிப்படுத்தினார்.

மொன்றியலில் தலைமையகத்தைக் கொண்ட பொம்பார்டியர் மற்றும் சீ.ஏ.ஈ Bombardier, CAE நிறுவனங்களும் மேலும் நோவா ஸ்கோஷியாவில் உள்ள ஐ.எம்.பி எரோ ஸ்பேஸ் ஆகியவற்றும் இந்த திட்டத்தில் இணைந்துகொள்ள கூடிய நிறுவனங்களாக உள்ளன.

“கனடா தன்னுடைய ராணுவ திறன்களை உள்ளூரில் உருவாக்க விரும்பினால்—மேம்படுத்தல், பாகங்கள் உற்பத்தி, இறுதி பொருத்துதல், பரிசோதனை—எல்லாவற்றிற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று யோஹான்சன் தெரிவித்தார். தேவைப்பட்டால் தொழில்நுட்பங்களை கனடாவுக்கு மாற்றி அளிக்கவும் தயாராக உள்ளோம் என குறிப்பிட்டார்.

  • 612
  • More
Comments (0)
Login or Join to comment.