·   ·  444 news
  •  ·  0 friends

கனடாவில் வேலையின்மை அதிகரிப்பு - செப்டம்பரில் 68,000 வேலைகள் இழப்பு

கனடாவின் பொருளாதாரம் செப்டம்பரில் 68,300 வேலைகளை இழந்துள்ளதாக புள்ளிவிவர நிறுவனம் Statistics Canada வெள்ளிக்கிழமை அறிவித்தது. இது தொடர்ந்து இரண்டாவது மாத வீழ்ச்சி. வேலையின்மை விகிதம் 6.5% ஆக உயர்ந்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் 42,000 வேலைகள் இழந்த நிலையில், இரண்டு மாதத்தில் மொத்தம் 1,10,000 வேலைகள் பறிபோயுள்ளன. கல்வி, சுகாதாரம் மற்றும் உற்பத்தி துறைகளில் இழப்பு அதிகம். கியூபெக்கில் மட்டும் 49,000 வேலைகள் குறைந்துள்ளன.

  • 73
  • More
Comments (0)
Login or Join to comment.