·   ·  369 news
  •  ·  0 friends

கனடாவில் மோசடி செய்த இந்திய வம்சாவளி இளம்பெண் கைது

கனடாவில், வாடகை மோசடியில் ஈடுபட்ட இந்திய வம்சாவளிப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் ப்ராம்டனில் வாழும் சவ்ரீத் கௌர் (27) என்னும் பெண், வீடு வாடகைக்கு இருப்பதாக விளம்பரம் செய்துள்ளார். அந்த விளம்பரத்தை நம்பி, பலர் கௌரை அணுகி வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதுடன், டெபாசிட் தொகையும் செலுத்தியுள்ளனர்.

ஆனால், அவர்கள் சம்பந்தப்பட்ட வீட்டுக்குச் செல்லும்போதுதான் தெரிந்துள்ளது, அந்த வீட்டில் ஏற்கனவே ஒரு குடும்பம் வாடகைக்கு இருப்பதும், அந்த வீட்டை வாடகைக்கு விடும் திட்டமே அந்த வீட்டுக்காரருக்கு இல்லை என்பதும்!

இதில் சிலர் தாங்கள் ஏற்கனவே வசித்த வீட்டை காலி செய்துவிட்டு தங்கள் உடைமைகளுடன் வந்துள்ளார்கள். அவர்கள் வாடகை ஒப்பந்தம் செய்து, குடியிருப்பதற்காக வந்த வீட்டில் ஏற்கனவே வேறொரு குடும்பம் வசித்துவருவது தெரிய வந்ததால், என்ன செய்வதென தெரியாமல் திகைத்துப்போன சம்பவங்களும் நடந்துள்ளன.

இந்நிலையில், அப்படி சுமார் 17 பேரை ஏமாற்றிய சவ்ரீத் கௌர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சுமார் 60,000 டொலர்களுக்கும் அதிகமான தொகையை இந்த வகையில் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. அவர் மீது 38 மோசடிக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விடயம் என்னவென்றால், வீடு வாடகைக்கு இருப்பதாக அவருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 17 பேரில் ஒருவருக்குக் கூட அவர் உறுதியளித்தபடி வீடும் கிடைக்கவில்லையாம், அவர் வாங்கிய டெபாசிட்டும் திருப்பிக் கொடுக்கப்படவில்லையாம்,

  • 33
  • More
Comments (0)
Login or Join to comment.