·   ·  321 news
  •  ·  0 friends

கனடாவில் 86,000 டாலர் வங்கி மோசடி

ஒண்டாரியோவைச் சேர்ந்த கணவன் மற்றும் மனைவி இருவரும் போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி தனிநபர் மற்றும் வணிக வங்கி கணக்குகளைத் தொடங்கியுள்ளனர்.

இதற்காக அவர்கள் பிறப்புச் சான்றிதழ்கள், கடன் அட்டைகள், ஒண்டாரியோ ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் குடிவரவு ஆவணங்களைப் பயன்படுத்தியதாகப் பீல் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.

கணவர், வங்கியின் உண்மையான வாடிக்கையாளர் போல ஆள்மாறாட்டம் செய்து, புதிய கணக்குகளைத் தொடங்கி டெபிட் கார்டுகளைப் பெற்றுள்ளார். மோசடி கண்டுபிடிக்கப்படுவதற்குள் பல்வேறு வங்கி கிளைகளில் இருந்து அவர் பணத்தை எடுத்துள்ளார்.

இவ்வாறு திருடப்பட்ட சுமார் 86,000 கனடிய டாலர் தொகையை, அவரது மனைவி தனது சொந்த வங்கி கணக்கிற்கு மாற்றியதாகக் காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. குறித்த நபர் பிராம்ப்டனில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். இவர் மீது பிணை நிபந்தனைகளை மீறியது மற்றும் 5,000 டொலருக்கு மேலான மோசடி உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஏற்கனவே வங்கி ஆவணங்களை வைத்திருக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவில் இருந்தபோதே இவர் மீண்டும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். பென்டோவின் மனைவியான இவர் மே 6ம் திகதி கைது செய்யப்பட்டார். இவர் மீது குற்றச் செயல்கள் மூலம் சொத்து சேர்த்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் பணத்தை இழந்த வாடிக்கையாளர்களுக்கு அந்தந்த வங்கி நிறுவனங்கள் இழப்பீடு வழங்கிவிட்டதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த தம்பதியினரால் பாதிக்கப்பட்ட இன்னும் பல வாடிக்கையாளர்கள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

  • 376
  • More
Comments (0)
Login or Join to comment.