·   ·  76 news
  •  ·  0 friends

6 குழந்தைகளை பிரசவித்த தாய்

இலங்கையில் தேசிய அளவில் முதன்முறையாக, கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தாயொருவர் 6 குழந்தைகளை பிரசவித்த அரிய நிகழ்வு பதிவாகியுள்ளது.

சிசேரியன் மூலம் 31 வயது இலங்கைத் தாய் ஒருவர் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். மூன்று ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண் குழந்தைகள்.

பேராசிரியர் டிரான் டயஸின் பராமரிப்பில், அதிகாலை 12:16 முதல் 12:18 வரை இரண்டு நிமிடங்களுக்குள் குழந்தைகள் பிரசவிக்கப்பட்டன. இந்நிலையில் தாய் மற்றும் பிறந்த ஆறு குழந்தைகளும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • 601
  • More
Comments (0)
Login or Join to comment.