·   ·  203 news
  •  ·  0 friends

பிரமாண்டமாக கொண்டாடப்பட்ட நெருப்பு திருவிழா

ஸ்கொட்லாந்து லெர்விக் பகுதியில் 140 ஆண்டுகளாக நடைபெறும் வைக்கிங் நெருப்பு திருவிழாவில் நூற்றுக்கணக்கானோர் தீப்பந்த ஊர்வலத்துடன் கலந்துகொண்டனர்.

ஸ்கொட்லாந்து நாட்டில் நடைபெற்ற பிரமாண்ட நெருப்பு திருவிழாவில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ஐரோப்பாவில் வாழ்ந்த வைக்கிங்ஸ் மக்களின் திருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமைகளில் இந்த திருவிழா நடத்தப்படுகிறது.

லெர்விக் பகுதியில் நடைபெற்ற வைக்கிங் திருவிழாவில் அந்த பகுதியை சேர்ந்த பூர்வகுடிகள் கையில் தீப்பந்தங்களை ஏந்திக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். வைக்கிங் மக்கள் பயன்படுத்திய நீளமான கப்பல் போன்று கட்டைகளை வைத்து உருவாக்கப்பட்டு, அதனை தீப்பந்தம் ஏந்தியவர்கள் வட்டமிட்டு பின்னர் அந்த கப்பல் மீது தீப்பந்தங்கள் வீசப்பட்டன.

இதைத் தொடர்ந்து வைக்கிங் பாரம்பரிய பாடலை அவர்கள் பாடினர். 140 ஆண்டுகளாக இந்த திருவிழா நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • 59
  • More
Comments (0)
Login or Join to comment.