·   ·  49 news
  •  ·  0 friends

Conception Bay South நகரில் அவசர நிலை பிறப்பிப்பு

கனடாவின் Newfoundland and Labrador மாகாண தலைநகரான St. John's நகருக்கருகிலுள்ள Conception Bay South நகரில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

27,000 பேர் வாழும் Conception Bay South நகரில் விரைவில் தண்ணீர் முழுமையாக காலியாக உள்ளது. நகரின் நீர்நிலைகளில் வேகமாக தண்ணீர் வற்றிவருவதாலும், நகருக்கு தண்ணீர் கொண்டுவரும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாலும், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

நகரில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மக்கள் அவசர தேவைகள் தவிர வேறு எதற்காகவும் தண்ணீரை பயன்படுத்தவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். Conception Bay South நகரில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அலுவலகங்கள் மூடப்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

நகர மேயரான Darrin Bent, தண்ணீர்க்குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பு எப்போது சரி செய்யப்படும் என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளதுடன், ஏற்கனவே காட்டுத்தீ காரணமாக நகர மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த சூழ்நிலை மக்களுக்கு கூடுதல் அழுத்தத்தை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

  • 684
  • More
Comments (0)
Login or Join to comment.