·   ·  167 news
  •  ·  0 friends

டொரண்டோ பகுதி மக்களுக்கு பனிப்பொழிவு குறித்த எச்சரிக்கை

டொராண்டோவில் இன்று இரவு இரண்டு முதல் நான்கு சென்றி மீற்றர் அளவுக்கு பனி பெய்யக்கூடும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த பனிப்பொழிவு, வாரத்தின் குளிர்ச்சியான தொடக்கத்துக்கு பின் வருகிறது. இன்று பகல் அதிகபட்ச வெப்பநிலை –1°C ஆக இருக்கும் என்றும், காற்றின் வேகத்தால் –12°C போல உணரப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இரவு வெப்பநிலை –5°C வரை குறையும். வாரத்தின் மீதிப் பகுதியிலும் மேகமூட்டமும் லேசான பனிப்பொழிவும் காணப்படும் நிலையில், வெப்பநிலை பனி உறையும் நிலையைச் சுற்றியே இருக்கும்.

  • 66
  • More
Comments (0)
Login or Join to comment.