·   ·  58 news
  •  ·  0 friends

படிக்கட்டுகளில் ஏறுவதற்கு சிரமப்படுகிறார் உசைன் போல்ட்

ஒலிம்பிக் தடகளப்போட்டிகளில் சாதனை படைத்த உசைன் போல்ட், 39, தற்போது படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதற்கு சிரமப்படுவதாக வெளியான தகவலை ஒப்புக்கொண்டார்.

ஜமைக்கா தடகள வீரரான உசைன் போல்ட், 39, ஒலிம்பிக் தடகளத்தில் 8 தங்கம் வென்றார். தடகளத்தில் 100 மீ., (9.58 வினாடி), 200 மீ., (19.19) ஓட்டத்தில் உலக சாதனை படைத்து 'மின்னல் வேக மனிதன்' என புகழ் பெற்றார். உலக சாம்பியன்ஷிப்பில் 5 தங்கம் வென்றுள்ளார். 2017ல் சர்வதேச தடகள அரங்கில் இருந்து விடை பெற்றார். இப்படி பல சாதனை படைத்த உசேன் போல்ட் தற்போது படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதற்கு சிரமப்படுகிறார் என செய்திகள் வெளியாயின. இதனை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ''நான் இளமையாக இருந்தபோது அது உண்மையில் ஒரு பிரச்னையாக இருக்கவில்லை. இப்போது படிக்கட்டுகளில் ஏறி இறங்கும்போது மூச்சு விட சிரமமாக இருக்கிறது. ஒட்டப்போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றதால் உடற் திறன் கணிசமாகக் குறைந்துவிட்டது,'' என்றார்.

  • 59
  • More
Comments (0)
Login or Join to comment.