ஒட்டாவாவில் உணவு வங்கியில் கூட்டம்
ஒட்டாவா உணவு வங்கியில் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 5 இலட்சத்து 92 ஆயிரம் வருகைகள் பதிவாகின. இது 2019 ஆம் ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம் என்று பசி அறிக்கை கூறுகிறது.
ஐந்தில் ஒரு குடும்பம் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது. வாடகை, கட்டணங்கள், உணவு ஆகியவற்றில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டிய நிலை பலருக்கு உள்ளது.