·   ·  169 news
  •  ·  0 friends

கனடாவில் குழந்தைகளிடையே அதிகளவில் பரவும்காய்ச்சல்

கனடா முழுவதும் மருத்துவமனைகள் குழந்தைகளில் காய்ச்சல் தொற்றுகளின் அதிகரிப்பை சந்தித்து வருகின்றன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 17 குழந்தைகள் மட்டுமே காய்ச்சல் வைரஸிற்கு உள்ளாகியிருந்த இருந்த நிலையில், இந்த ஆண்டு அதே மாதத்தில் 145 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது எட்டு மடங்கு அதிகரிப்பு என கிழக்கு ஒண்டாரியோ குழந்தைகள் மருத்துவமனை (CHEO) வெளியிட்ட தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி 12 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவர்கள் பாதுகாப்பு உருவாக இரண்டு வாரங்கள் ஆகும் என்பதால் உடனடியாக காய்ச்சல் தடுப்பூசி எடுக்குமாறு மக்களிடம் வலியுறுத்துகின்றனர்.

பிற குழந்தைகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதால் பள்ளி வயதுடைய குழந்தைகளே முதலில் பாதிக்கப்படுவார்கள் என்றாலும், இரண்டாண்டுகளுக்கு குறைவான குழந்தைகள் மற்றும் முன் நோய்கள் கொண்டவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூத்த வயதினர், குறிப்பாக 75 வயதுக்கு மேற்பட்டவர்களும் தீவிர நோய்க்கு உள்ளாகும் அபாயம் காரணமாக கூடுதல் கவனம் தேவைப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • 85
  • More
Comments (0)
Login or Join to comment.