·   ·  84 news
  •  ·  0 friends

ஒண்டாரியோ தியேட்டரில் துப்பாக்கிச்சூடு

கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள ஒரு திரையரங்கில் இந்திய திரைப்படம் திரையிட்ட ஒரு தியேட்டரில் துப்பாக்கிச்சூடு மற்றும் தீ வைப்பு தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றதை தொடர்ந்து, அந்த திரையரங்கு இந்திய திரைப்படங்களைத் திரையிடுவதை நிறுத்தியுள்ளது.

ஓக்வில் நகரில் அமைந்துள்ள இந்த திரையரங்கின் நிர்வாகம், தொடர்ச்சியான வன்முறை சம்பவங்களுக்கும், தாங்கள் திரையிட்ட இந்திய திரைப்படங்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்தியப் படங்களைத் திரையிடுவது தொடர்பாக மிரட்டல்களையும் நாச வேலைகளையும் நாங்கள் எதிர்கொள்வது இது முதல் முறையல்ல" என்று திரையரங்கின் சி.இ.ஓ. ஜெஃப் க்னோல் தெரிவித்துள்ளார்.

சமூகத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்த வன்முறை சம்பவங்களை தொடர்ந்து இந்திய திரைப்படங்களைத் திரையிடுவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக திரையரங்கு நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த முடிவு கனடாவில் உள்ள இந்திய திரை ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

  • 491
  • More
Comments (0)
Login or Join to comment.