·   ·  217 news
  •  ·  0 friends

கனடா வரிவிதிப்பு தொடர்பில் டிரம்புக்கு எதிராக அவரது கட்சியினரே வாக்களிப்பு

அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டலையும் மீறி, அவரது குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனேடிய வரிவிதிப்புக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள்.

ஜனநாயகக் கட்சியினர் முன்வைத்த, கனேடிய வரிவிதிப்புக்கு எதிரான மசோதாவுக்கு ஆதரவாக 219 பேரும், எதிராக 211 பேரும் வாக்களிக்க, மசோதா வெற்றிபெற்றுள்ளது.

அதாவது, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவை, கனடா மீது அமெரிக்கா கூடுதல் வரிகள் விதிக்கக்கூடாது என்கிறது. விடயம் என்னவென்றால், இனி இந்த மசோதா நாடாளுமன்றத்தின் மேலவையில் வாக்கெடுப்புக்கு விடப்படும்.

அங்கும் அது வெற்றி பெற்றாலும், கடைசியாக முடிவெடுக்கவேண்டியது, அதாவது, மசோதாவில் கையெழுத்திடவேண்டியது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்தான் என்பதால், நாடாளுமன்றத்தில் வெற்றிபெற்றாலும் கூட, இந்த மசோதா அமல்படுத்தப்படுமா என்பது சந்தேகமே என்பது குறிப்பிடத்தக்கது.

  • 49
  • More
Comments (0)
Login or Join to comment.