·   ·  184 news
  •  ·  0 friends

கனடாவிலேயே வாழ தலைசிறந்த நகரம் குவெல்ஃப்

Zolo என்னும் ரியல் எஸ்டேட் நிறுவனம், சமீபத்தில், ‘2025ஆம் ஆண்டில் கனடாவில் வாழ தலைசிறந்த இடங்கள்’ பட்டியலை வெளியிட்டது.

2025ஆம் ஆண்டில் கனடாவில் வாழ தலைசிறந்த நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நகரம், ஒண்டாரியோ மாகாணத்திலுள்ள குவெல்ஃப் (Guelph) ஆகும். இந்த பட்டியல், நகரிலுள்ள வீடுகள் விலை, சராசரி வருவாய், குற்றச்செயல் வீதம், ஆண்டுக்கு எத்தனை நாட்கள் சூரிய ஒளி இருக்கும், பாதசாரிகள் நடந்து செல்ல வசதி மற்றும் விலைவாசி ஆகிய காரணிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

குவெல்ஃப் நகரம், ஒண்டாரியோவிலிருந்து ஒரு மணி நேர பயணத் தொலைவில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்கள், நல்ல காபி ஷாப்கள், உள்ளூர் கடைகள், இருபுறமும் மரங்கள் நடப்பட்ட நடைபாதைகள் ஆகியவை குவெல்ஃப் நகரின் சிறப்பம்சங்கள் ஆகும்.

ஒண்டாரியோவிலுள்ள மிக பாதுகாப்பான நகரங்களில் ஒன்று குவெல்ஃப் என்பதால், குடியமர ஏற்ற நகரமாக அந்நகரம் கருதப்படுகிறது.

குவெல்ஃப் நகரில் வீடுகளின் விலை, 2025 செப்டம்பர் நிலவரப்படி, சுமார் 745,000 டொலர்கள் ஆகும். இந்த நகரிலுள்ள குடும்பங்களின் ஆண்டு சராசரி வருவாய், 119,100 டொலர்கள், இங்கு விலைவாசியும் குறைவுதான்.

நீங்கள் தற்போது வாழும் இடத்திலிருந்து ஒரு புதிய இடத்துக்கு குடிபெயர விரும்புவீர்களானால், குவெல்ஃப் நகரம், குடியமர்வதற்கு ஏற்ற, நாட்டின் தலைசிறந்த நகரங்களில் ஒன்று ஆகும்.

  • 45
  • More
Comments (0)
Login or Join to comment.