வடதேசத்திலிருந்து வந்து திருவண்ணாமலை அருகில் முல்லந்திரம் மற்றும் பிற கிராமங்களில் குடியமர்ந்த கௌட பிராமண குடும்பத்தில் பிறந்தவர் அருணகிரிநாதர். அவர் திருவண்ணாமலையில் வாழ்ந்து வந்தார். அருணகிரிநாதர் புராணத்தில் அருணகிரிநாதரின் ஜன்மதினமாக புரட்டாதி உத்தரமும் தனுர் லக்னமும் செவ்வாய்க்கிழமையும் கூடிய நாள் பிறந்தார் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனிப் பூரணையையும் அருணகிரிநாதர் விழாவாக இலங்கையில் கொண்டாடி வருகிறார்கள். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர்.
(Note:அருளாளர் அருணகிரி நாதரின் போற்றத்தக்க வாழ்க்கை வரலாற்றை அகச்சான்றுகள் மற்றும் கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையில்)
இவரது தந்தையார் பெயர் திருவெண்காடர் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் கருதப்படுகிறது.
அருணகிரி இளமைப் பருவத்திலிருந்தே தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளைக் கற்றுத் தேர்ந்திருந்தார். தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். சம்ஸ்கிருதத்தையும் கற்றார். அவருக்கு நன்கு கல்வி போதிக்கப்பட்டது.
அவருக்குத் திருமணம் ஆகி குழந்தைகள் இருந்தாலும் விதிவசத்தால் அவர் திருவண்ணாமலையில் விபச்சாரிகளின் மோக வலையில் சிக்கித் தவித்தார். சிற்றின்பச் சேற்றில் மூழ்கினார். விபச்சாரிகளை திருப்திப்படுத்த தன் செல்வம் முழுவதையும் இழந்தார். எந்நேரமும் காமத்தில் இருந்ததால் சொத்தை இழந்ததோடு அல்லாமல் நோயாலும் அவதிப்பட்டார்.
அருணகிரி தனது செயலுக்காக வெட்கப்பட்டார். கிடைத்தற்கரிய மனிதப் பிறவியைத் தான் வீணாக்கிவிட்டதற்காக வருந்தினார். வேதனைப்பட்டார். ஒரு முதியவர் அவரைப் பார்த்து முருகப் பெருமானை வழிபடுவதிலும், தியானிப்பதிலும், அவரிடம் பிரார்த்தனை செய்வதிலும் நேரத்தைச் செலவிடுமாறு அறிவுரை கூறினார். அதன்படி கோவில் கோபுரத்தின் அருகில் அமர்ந்து இறைவன் மீது மனதைச் செலுத்தி தியானித்தார். ஆயினும் மனம் அமைதி பெறவில்லை. இறுதியாக, தரம் தாழ்ந்த தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளவும், தான் செய்த பாவத்துக்குப் பரிகாரம் தேடவும் அவர் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவு செய்தார். கோவில் கோபுரத்தின் உச்சிக்கு ஏறிச் சென்றார். முருகனைப் பிரார்த்தித்தார். தற்கொலை செய்துகொள்ள கோவில் கோபுரத்திலிருந்து கீழே குதித்தார். அவர் பூமிக்கு அருகில் வரும்போது அவர் வணங்கும் முருகன் தனது அபார கருணையினால் அவரை தனது திருக்கரங்களில் தாங்கிப்பிடித்து காப்பாற்றினார். தனது வேல் கொண்டு அருணகிரியின் நாவில் “ஓம்” எனும் புனிதமான பிரணவ மந்திரத்தை எழுதினார். அவருக்கு ஒரு ஜபமாலையைத் தந்தார். தனது புகழைப் பாடுமாறு அருளாணை பிறப்பித்தார். பாடுவதற்கு ‘முத்தைத்தரு’ என்று முதலடியும் எடுத்துக் கொடுத்தார். பாவியான அருணகிரி நொடிப் பொழுதில் இறைஞானம் பெற்ற பரமஞானியாக மாற்றம் பெற்றார். தீராத நோய் தீர்ந்து முழுமையான ஆரோக்கியமான உடல்நலம் பெற்றார். பல்வேறு தெய்வீக அனுபவங்களைப் பெற்றார்.
அருணகிரியார் வீடுவாசலற்ற துறவியானார். எப்பொழுதும் இறைவன் புகழைப் பாடும் பணியே பணியாய் மேற்கொண்டார். திருவண்ணாமலையில் கோவில் கொண்டிருக்கும் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து பாடினார். அவர் புகழ் திக்கெட்டும் பரவியது. அந்த தேசத்து மன்னன் பிரவுட தேவன் அருணகிரிநாதரைப் போற்றி வணங்கி அவர் பக்தராக மாறினார். அருணகிரியாரைக் காப்பாற்றியருளிய முருகனை மன்னன் தரிசிக்க விரும்பினார். அதற்காக அருணகிரியை வேண்டினார். அருணகிரியும் அதற்காகக் கூட்டிய ஒரு சபையில் ‘அதலசேடநாராட’ என்ற திருப்புகழ் பாடலைப்பாடி முருகப்பெருமானை காட்சி அளிக்கப் பிரார்த்தித்தார். அவ்வண்ணமே, முருகப் பெருமான் மன்னன் மற்றும் திரளாகக் கூடியிருந்த மக்கள்முன் ஒரு கம்பத்திலிருந்துத் தோன்றி, ஆடிடும் மயில் மீது ஏறிவந்து காட்சி தந்தார். மன்னன் பெருமகிழ்ச்சி அடைந்தான். மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். முருகன் கம்பத்திலிருந்து வெளிப்பட்டு காட்சியளித்த இடத்தில் முருகனுக்குக் கோயில் இருக்கிறது. அது “கம்பத்து இளையனார் கோவில்” என்று அழைக்கப்படுகின்றது.
அருணகிரிநாதர் தென்னிந்தியா முழுவதிலும் உள்ள கோயில்களுக்குச் சென்று 16,000 பாடல்களை இயற்றினார். இராமாயணம் முழுவதையும் அருணகிரி நாதர் தன் திருப்புகழ் பாடல்களில் பல இடங்களில் விரவிப் பாடியிருக்கிறார். கிருஷ்ண லீலைகளும் பாடியிருக்கிறார். சுந்தரர், திருஞானசம்பந்தர் முதலிய பெருமக்கள் பற்றியும் குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார். அருணகிரிநாதர் எழுதிய "திருப்புகழ்" தேவாரத்திற்கு இணையாகவும், "கந்தர் அலங்காரம்" திருவாசகத்திற்கு இணையாகவும், "கந்தர் அனுபூதி" திருமந்திரத்திற்கு இணையாகவும் முருக பக்தர்களால் போற்றப்படுகின்றது.
அருணகிரிநாதர் தனது நீண்ட யாத்திரையை நிறைவு செய்து திருவண்ணாமலைக்குத் திரும்பி வந்தபோது மன்னன் பிரவுட தேவன் உரிய மரியாதையுடன் வரவேற்றான். அருணகிரியார் தனது இறுதிக் காலத்தை தியானத்தில் தவத்தில் கழித்தார். நாளடைவில் இறைவனோடு இரண்டறக் கலந்து, அத்வைத நிலையாகிய சாயுஜ்ய நிலையை அடைந்தார். அவர் தனது பூத உடலை உதறித்தள்ளியபோது, தனக்கு இறைவனை தரிசிக்கும் வாய்ப்பை அருளித்தந்த அருணகிரிநாதருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மன்னன் பிரவுடதேவன், அவர் உடலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மேலைப் பிராகாரத்தில் அடக்கம் செய்து, அத்துடன் அவருக்கு ஒரு சிறிய கோவிலும் அமைத்தான். அதில் அருணகிரிநாதரின் கல் விக்கிரஹத்தைப் பிரதிஷ்டை செய்து, அதற்கு தினசரி பூஜை செய்வதற்கும் ஏற்பாடு செய்தான். இந்தச் சமாதிக் கோவிலை இன்றும் நாம் காணலாம்.
(Note:அருளாளர் அருணகிரி நாதரின் போற்றத்தக்க வாழ்க்கை வரலாற்றை அகச்சான்றுகள் மற்றும் கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையில்)
அருணகிரிநாதர் தென்னிந்தியா முழுவதிலும் உள்ள கோயில்களுக்குச் சென்று 16,000 பாடல்களை இயற்றினார்.இராமாயணம் முழுவதையும் அருணகிரி நாதர் தன் திருப்புகழ் பாடல்களில் பல இடங்களில் விரவிப் பாடியிருக்கிறார். கிருஷ்ண லீலைகளும் பாடியிருக்கிறார். சுந்தரர், திருஞானசம்பந்தர் முதலிய பெருமக்கள் பற்றியும் குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார். அருணகிரிநாதர் எழுதிய "திருப்புகழ்" தேவாரத்திற்கு இணையாகவும், "கந்தர் அலங்காரம்" திருவாசகத்திற்கு இணையாகவும், "கந்தர் அனுபூதி" திருமந்திரத்திற்கு இணையாகவும் முருக பக்தர்களால் போற்றப்படுகின்றது.
நூல் பட்டியல்
- கந்தர் அந்தாதி (102 பாடல்கள்)
- கந்தர் அலங்காரம் (108 பாடல்கள்)
- கந்தரனுபூதி (52 பாடல்கள்)
- திருப்புகழ் (1307 பாடல்கள்)
- திருவகுப்பு (25 பாடல்கள்)
- சேவல் விருத்தம் (11 பாடல்கள்)
- மயில் விருத்தம் (11 பாடல்கள்)
- வேல் விருத்தம் (11 பாடல்கள்)
- திருவெழுகூற்றிருக்கை
திருவண்ணாமலையில் கோவில் கொண்டிருக்கும் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து பாடினார். அவர் புகழ் திக்கெட்டும் பரவியது. அந்த தேசத்து மன்னன் பிரவுட தேவன் அருணகிரிநாதரைப் போற்றி வணங்கி அவர் பக்தராக மாறினார். அருணகிரியாரைக் காப்பாற்றியருளிய முருகனை மன்னன் தரிசிக்க