----------------------------------------காதலர் தினம் உருவான கதை------------------------------------------ரோமாபுரி நாட்டில் கிளாடியுஸ் மிமி ஆட்சிக் காலத்தில் `திருமணம் செய்வதால் ஆண்கள் வீரத்தை இழக்க நேரிடும். அவர்கள் போரில் சரியாகப் பங்களிக்கமாட்டார்கள் நாட்டு மக்கள் யாரும் இனி திருமணம் செய்து கொள்ளக்கூடாது. ஏற்கெனவே திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தவர்கள் கூடத் திருமணம் செய்யக் கூடாது’ என்ற உத்தரவைப் பிறப்பித்தார். ஆனால், அரசரின் அறிவிப்பை மீறி பாதிரியார் வாலன்டைன் காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார். இந்தச் செய்தி நாடு முழுவதும் பரவியது. பல காதல் ஜோடிகள் அங்கு படையெடுத்தனர், அவர்களுக்கு வாலன்டைன் திருமணம் செய்துவைத்தார். இந்தச் செய்தியை அறிந்த மன்னர், பாதிரியாரைக் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டு, பின் அவருக்கு மரண தண்டனை விதித்தார். அவர் சிறையில் இருந்த காலகட்டத்தில் சிறைக் காவலரின் பார்வையற்ற மகள் அஸ்டோரியசுக்கும் காதல் மலர்ந்தது. தனக்குக் கண் பார்வை கிடைத்ததை போல, பல மடங்கு சந்தோஷத்தில் இருந்த அஸ்டோரியசுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. இவர்களின் காதல் விஷயம் தெரியவரவே, அவள் வீட்டில் சிறைவைக்கப்பட்டாள். வாலன்டைனுக்கு தண்டனை நிறைவேற்றும் நேரம் வந்தது. தண்டனை நிறைவேறுவதற்கு முன் தன் காதலிக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தின் கடைசியில் ``உன்னுடைய வாலன்டைனிடமிருந்து" என்ற வார்த்தை எழுதப்படட்டிருந்தது. அவர் கொல்லப்பட்ட அந்த நாள் கி.பி.270, பிப்ரவரி 14. இந்த நாளைத்தான் உலகம் முழுவதும் பின்னாளில் வாலன்டைன்ஸ் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
-------------------------------------*இன்றைய காதலர் தின கவிதை*----------------------------------- *மனைவியை காதலியுங்கள் இல்லறம் நல்லறமாகும்! செய்யும் தொழிலை காதலியுங்கள் மதிப்பு இன்னும் பெருகும்! மண்ணை காதலியுங்கள் பொன்னாய் விளையும்! விண்ணை காதலியுங்கள் உங்கள் வாழ்வும் நட்சத்திரமாய் மின்னும்! விவசாயத்தை காதலியுங்கள் விளைச்சல் பெருகும்! நட்பை காதலியுங்கள் என்றும் நலமாய் இருக்கும்! சகோதரத்துவத்தை காதலியுங்கள் அன்பு பெருகும்! சமூகத்தை காதலியுங்கள் வன்மம் குறையும்! இயற்கையை காதலியுங்கள் செயற்கை வாழ்வு மறையும்! மரங்களை காதலியுங்கள் சுவாசம் இதமளிக்கும்! பூக்களை காதலியுங்கள் வாசமாய் மலரும்! மூத்தவர்களை காதலியுங்கள் ஆசீர்வாதமாய் மாறும்! வீட்டை காதலியுங்கள் என்றும் மகிழ்வு பெருகும்! நாட்டைக் காதலியுங்கள் நன்மதிப்பு கூடும்! பிறருக்கு உதவும் பணியை காதலியுங்கள்உங்கள் சந்ததி மகிழும்! காதல் என்ற மூன்று எழுத்து அன்பு என்ற மூன்று எழுத்து மந்திரமாகி மதம் என்ற மூன்று எழுத்தை மாற்றும் தந்திரமாய் மாறுமே! ஆதலினால் காதல் செய்வீர் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!*